Header Ads

கலைஞர்களுக்கு செய்த சேவைக்கு - கனடா விருது

 



--மகிழ்மதி

தமிழகத்தை சேர்ந்த தம்பதி கொரோனா  பேரிடர் காலத்தில் கனடாவில் செய்த சேவையை கௌரவிக்கும் வகையில் கனடா நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செட்டி நாட்டைச்  பூர்வீகமாகக் கொண்டு,மதுரையில் பிறந்தவர் வள்ளிக் கண்ணன் மருதப்பன்.

இவர் கனடாவில் பதிவு செய்த லாபநோக்கமற்ற கனடா தமிழ் சங்கத்தின் நிறுவனர் மற்றும் சேர்
மேனாக இருந்து வருகிறார். இவர் கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ் நாட்டு நடனக் கலைஞர்கள்,
கிராமிய கலைஞர்கள் மற்றும் மேடை இசைக் கலைஞர்களுக்காக யூடியூப் நிகழ்ச்சி செய்து பணவுதவி செய்துள்ளார்.

அதேபோன்று வள்ளிக்கண்ணன் மனைவி பார்வதி அங்கு ஊரடங்கு காலத்தில் தவித்த மாணவர்களுக்கு சுமார் 10 வாரங்கள், 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்.

வள்ளிக் கண்ணன் பார்வதியின் சமுதாய சேவை மனப்பான்மையை கௌரவிக்கும் முகமாக STAEVENTS மற்றும் SUPREME GROUP OF COVID-19 என்னும் விருது வழங்கி பாராட்டி கௌரவித்துள்ளது.

No comments

Powered by Blogger.