தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி முக்கிய தகவல்.....
✍️ | மகிழ்மதி.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இடையில் கடந்த ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து இயங்கி வந்த நிலையில் தொற்று கடுமையாக உயர்ந்த காரணத்தால் முற்றிலும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் நிலையில், இ பாஸ் தளர்வை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதனை தொடர்ந்து நேற்று, இபாஸ் விதிகளில் மேலும் சில தளர்வை அறிவித்துள்ளது.
72 மணி நேரத்தில் திரும்பினால்
இதன்படி வெளிமாநிலத்தில் இருந்து தொழில் நிமர்த்த்மாக வந்து 72 மணி நேரத்தில் திரும்புவோருக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரவும் இபாஸ் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் இ பாஸ் விதிகள் தமிழகத்திற்கு அவசியம் என்றே அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்தால் போதும்
No comments