விண்ணப்பித்து விட்டீர்களா..... வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு
✍️ | ராஜாமதிராஜ்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ள செய்தியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசின் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் திட்டத்தின் கீழ் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் திட்டத்தின் கீழ் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கி புரோபேஷனரி ஆபீசர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டு மையத்தை 94 87 375 737 என்ற வாட்ஸ்அப் என் மூலமாகவும் 0567 230160என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்
No comments