Header Ads

நடிகை சாவித்திரியின் மகள் வெளியிட்ட அரிய புகைப்படங்கள்....


 ✍️ | மகிழ்மதி.

நடிகை சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது யாரும் கண்டிராத பல அறிய புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு இணையில்லாத நடிகையாக வலம் வந்த நடிகை சாவித்திரி ரசிகர்கள் கொண்டாடும் பேரழகியாக திரைப்படங்களில் வலம் வந்தார்.

தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்திரிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்ற நிலையில் அவர்கள் சிறுவயதில் குடும்பத்தாருடன் இருக்கும்போது எடுத்துக்கொண்ட பல்வேறு அழகிய புகைப்படங்களை தற்பொழுது சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகையர் திலகம்

 தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து ஒப்பற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாவித்திரி. மகாநடி,நடிகையர் திலகம் என பல்வேறு பெயர்களால் போற்றப்பட்டு வரும் இவர் கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பெரும் புகழோடு வலம் வந்தவர்



பிரியமான நடிகை 

தமிழில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ள இவர் பாசமலர், பாவமன்னிப்பு, தூய உள்ளம், கொஞ்சும் சலங்கை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பிரியமான நடிகையாக வலம் வந்த இவர் நடிப்பு, அழகு, நடனம் மற்றும் இயக்கம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர்.


பல்வேறு திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில் ரியல் ஜோடியாகவும் ரீல் ஜோடியாகவும் மக்கள் மனதில் மிகப் பிரபலமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஷ் குமார் என்ற மகனும் இருக்கின்றனர்.



அதில் சாவித்திரியின் மகன் சதீஷ் குமார் பிறந்த குழந்தையாக இருக்கும் போது ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி அவரை கையில் தூக்கி வைத்து கொஞ்ச அருகில் விஜய சாமுண்டீஸ்வரி சமத்து குட்டி பெண்ணாக தம்பியை ரசித்தவாறு வெளியிட்டுள்ள இந்த அழகிய அரிய புகைப்படங்களை விஜய சாமுண்டீஸ்வரி தற்பொழுது தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து "மை தம்பி பாப்பா" என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த நடிகை சாவித்திரியின் ரசிகர்கள் பழைமையான நினைவுகளை கண்முன் கொண்டு வருகிறது என நெகிழ்ந்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.