Header Ads

எடப்பாடிக்கு பேனர் வைத்த அரியர் மாணவர்கள்....


 ✍️ | ராஜாமதிராஜ்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. 

இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனோ தாக்கம் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. 

இதன் காரணமாக நடத்தப்பட இருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு வந்தன.

இதையடுத்து, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ரேண்டம் எண்களை வெளியிட்டார்.

இந்த நிலையில்  கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்தார். மேலும், எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும், தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைவரையும் தேர்ச்சி பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில்,  அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட  கொல்லம்பாளைய திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவர்கள்  பதாகைகள் வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.