Header Ads

அம்மா இரு சக்கர வாகனம் பெறுவதற்கான விண்ணப்பிக்கவேண்டிய தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

 


அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு ரூ. 31,250/- வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 125சிசி திறனுடைய வாகனத்தை, ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலிருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம்.

இரு சக்கர வாகன திட்டமானது, பணிபுரியும் மகளிருக்காக மட்டுமே. இந்த மானியம் பெறுவதற்கு 18வயது முதல் 45வயது உள்ளவர்கள் எல் எல் ஆர் அல்லது ஓட்டுநர் உரிமம்  இருக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கு எந்த கட்டணமும் இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும். மேலும், http://www.tamilnadumahalir.org/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி மலை 5மணி வரை என்றிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 14ஆம் தேதி பிற்பகல் 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.