Header Ads

வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதி

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிவிப்பு படி, கோவிட் -19 கிருமி பரவல் தொடர்ந்து தமிழக அரசால் கண்காணிக்கப் பட்டு வருகிறது. பொது மக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

 



ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நரட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  

அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது, 10,000 ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ள வவழிபாட்டுத்தலங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10.08.2020 முதல் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும்.

அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் 10.08.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 கிருமி பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழு ஒத்துழைப்புடன் கிருமி பரவலை முறியடிப்போம்.

கீழே உள்ளவாறு கட்டாயம் பின்பற்றவும்:
  1. வெளியில் செல்லும் பொது கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்,
  2. சமூகத்தில் தூர இடைவெளியை கடைபிடிக்கவும்.
  3. பொது இடங்களின் எச்சில் துப்பாதீர்கள்.
  4. தும்மல் வந்தால் துணியினால் முகத்தை மூடிக்கொள்ளவும்.
  5. கூட்ட நெரிசலான இடம் மற்றும் தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும்.
  6. வீட்டில் குழந்தைகள், வயதான பெரியவர்கள் இருந்தால் அதிக கவனம் செலுத்துங்கள். அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள்.
  7. ஜாதி, இனம், மதம் கடந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்த கிருமி பரவலை முறியடிப்போம்.
  8. நேர்மறை சிந்தனையோடு (Positive Thoughts), நமிபிக்கையுடன் இருங்கள்.



Powered by Blogger.