தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே ஈ-பாஸ் இல்லாமல் பொதுமக்கள் பயணிக்கலாம் செப்டம்பர் மாதம் முதல்
31.8.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 30.08.2020 நள்ளிரவு 12 மணிவரை மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
1. தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே ஈ-பாஸ் இல்லாமல் பொதுமக்கள் பயணிக்கலாம்.
2. அனைத்து வழிபாட்டு தளங்களிலும், பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
3. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து இயங்கலாம்.
4. வணிக வளாகங்கள், பெரிய கடைகள் திரையரங்குகளை தவிர அனைத்தும் 100% இயங்கலாம்.
5. உணவகங்கள், கடைகள், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் 100% பணியாளர்களுடன் காலை 6 மணி முதல் இரவு 8மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
6. சுற்றுலா தளத்திற்கு செல்பவர்கள் சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் ஈ - பாஸ் பெற்று செல்ல வேண்டும்.
7. செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
8. பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது.
இந்த தளர்வுகள் பொதுமக்களின் நலன் கருதியும், தொழில்துறையின் வளர்ச்சியின் நோக்கத்திலும், கிருமி தொற்று குறைந்து வந்ததாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள், அரசு எடுத்து வரும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments