Header Ads

இந்த காலத்திற்கேற்ப மாடர்னாக வீட்டை அலங்காரம் செய்வது எப்படி ?


 ✍️ | மகிழ்மதி.

நவீன உட்புற நிறங்கள் மற்றும் வடிவமைப்பு போக்குகள் மக்களின் கலாச்சார உத்வேகத்தை பிரதிபலிக்கின்றன, இந்த நவீன உட்புற அலங்காரங்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், பூமியைப் பாதுகாப்பதற்கும், தங்களை சமூகத்தில் இணைத்துக் கொள்வதற்கும் ஏற்படுத்தப்படுகின்றன. 

இதற்காக செலவு செய்யப்படும் பணம் அழியகூடியதாக இல்லாமல், மனிதனுக்கு ஆயுளை நீடிக்கும் ஒரு வரமாகவே கருத்தப்படுகிறது. விசித்திரமான, தைரியமான, பலமுறை மாற்றி கொண்டே இருக்கும் விலையுயர்ந்த செலவுகள் இன்று காணமல் போய்விட்டன. நியாயமான முறையில், நடைமுறை, சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, மற்றும் வசதியான, செயல்திறன் மிக்க, இனிமையான மற்றும் நவீன உட்புறங்களை உருவாக்குவதற்கான வடிவமைப்பு போக்குகள் இப்போது நடைமுறையில் உள்ளன.

பணத்தையும் நேரத்தையும் மிச்சபடுத்தி அதே சமயம், அழகான முறையில் அலங்கரிக்கப்பட்ட அறைகள் மற்றும் வீடுகளினால், சந்தோஷமாக உறவுகளிடம் கலந்து பேசும் சூழலை உருவாக்குகிறது. அதிக பணம் செலவு செய்து புதியவற்றை உருவாக் குவதை விட , நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அழகாக எப்படி வீட்டை காண்பிப்பது என்பதை இந்த நவீன உட்கட்டமைப்பு நமக்கு விளக்குகிறது

பச்சை நிறமும், பழுப்பு நிறமும் கலந்த நிறங்கள் 2018ம் ஆண்டில் அதிகம் பேரால் தேர்வு செய்யப்படும் அறை அலங்கார நிறங்களாக உள்ளன. இவற்றுடன் இணைந்து நீலம், வெள்ளை, கருப்பு , அடர் சிவப்பு, மென்மையான ஆரஞ்சு , மஞ்சள் போன்ற நிறங்கள் சேர்க்கப்படுகின்றன. 

இத்தகைய நிறங்கள் கொண்ட அறைகள் வெதுவெதுப்பாக மற்றும் வசதியாக உணரப்படுகின்றன. இந்த நிறங்களில், மின்னும் துகள்களாக கிரே அல்லது தங்க நிறத்தை சேர்க்கும்போது, மிகவும் அழகான அறைகள் நமக்கு கிடைக்கின்றன.

எளிமையான கோடுகள் மற்றும் வடிவங்கள் கூட ஒரு வகை ட்ரென்ட் தான். நவீன உட்புற அலங்காரத்தில், வடிவியல் சார்ந்த, சுத்தமான, சிறிய வளைவுகள் கொண்ட வடிவத்திற்கு அதிக மதிப்பு உண்டு. மினிமலிஸ்ட், ஸ்காண்டிநேவிய மற்றும் உயர் தொழில்நுட்ப பாணிகள், அதேபோல் ரெட்ரோ-நவீன வடிவமைப்புகளின் செல்வாக்கு ஆகியவை உள்துறை வடிவமைப்பிற்கான ஸ்டைலான விருப்பங்கள் ஆகும்.

No comments

Powered by Blogger.