கடமை தவறாத நெல்லை காவல் ஆய்வாளர்
✍️மகிழ்மதி
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த அணிவகுப்பை தலைமையேற்று நடத்தினார் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி.
தந்தை நேற்று இரவே உயிரிழந்தது தெரிந்தும் இன்று காலை நெல்லையில் நடைபெற்ற சுதந்திர தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் மஹேஸ்வரி அணிவகுப்பு மரியாதையை முடித்த பிறகு தந்தையின் இறுதி சடங்குக்கு திண்டுக்கல் புறப்பட்டார்.
எந்த வகையிலும் குறைவின்றி அணிவகுப்பு நிகழ்த்திய பிறகுதான் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் கம்பீரமான அந்த காவல் அதிகாரியை ஆறுதல் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்
Grate
ReplyDelete