அடுத்து நாம் சந்திக்கப்போகும் பேரழிவு; பருவநிலை மாற்றம் குறித்து வல்லுனர்கள் எச்சரிக்கை
✍ | மொழி.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லேக் ஹட்ஸ் ஏரிக்கு அருகில் உள்ள தேசிய வனப்பகுதியில் வெடி பொருள் வெடித்தது போன்று ஏற்பட்ட காட்டு தீ மளமளவென மூன்று மணி நேரத்திற்குள் 10,000 ஏக்கர் அளவிற்கு பரவியது. புகை மண்டலமாக காட்சியளித்த வனப்பகுதி தொடர்ந்து பரவிவரும் காட்டு தீயால் தீயணைப்பு படை வீரர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி அப்பகுதியை சுற்றி வசிக்கும் 500கும் மேற்பட்ட குடும்பங்களை தீயணைப்பு துறையினர் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்குமுன் 2018ம் ஆண்டு ஏற்பட்ட காட்டு தீ தான் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய காட்டு தீயாக கருதப்பட்டது அதன் பின்பு தற்போது ஏற்பட்ட காட்டு தீயே, மிகப்பெரிய காட்டு தீயாக கருதப்படுகிறது. கடந்த சில வருடங்களில் இது போன்ற நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் பலமுறை ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபற்றி நமது புவியியல் வல்லுநர்கள் கூறுகையில், நாம் இனியும் தாமதிக்காமல் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் மரம் வளர்க்க வேண்டும். அதனால் காற்றை சுத்தம் செய்யவும், நீர்வளத்தை அதிகரிக்கவும், காற்றின் ஈரப்பதத்தை சீரான முறையில் வைக்கவும் முடியும். தனி நபர்கள், தங்கள் சொந்த இடங்களில் மரம் நடலாம். ஊர் பொது இடங்களில் ஊர் தலைவர்கள் அல்லது பொது மக்கள் முன் வந்து மரம் நட்டு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.
அடுத்து, ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் செல்ல வேண்டி இருப்பின் மிதிவண்டியை பயன்படுத்தலாம். இதனால் பல வழிகளில் சேமிப்பையும், பயனையும் நாம் அடையாளம்.
No comments