மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.
✍ | ராஜாமதிராஜ்.
மதுரை ஓப்ளாபடித்துறையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கும், கலையுலகிற்கும் தலைநகராக மதுரை திகழ்கிறது. நிச்சயமாக மதுரை 2 ஆவது தலைநகரமாக வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம். அரசியல் முடிவு எடுக்கும் இடம் மதுரை. திருச்சியை தலைநகராக்க எம்.ஜிஆர் விரும்பினார். ஆனால் அது அப்போது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நடைபெறவில்லை.
தொழில்கள் வாய்ப்புகள் நிறைய வேண்டும் என்பதற்காகவே இந்த இரண்டாவது தலைநகர் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு தலைநகர் உள்ளது.
பிஜேபி கை காட்டும் கட்சி அடுத்து ஆட்சியமைக்கும் என்பது அவர்கள் கட்சியின் கருத்து, எங்கள் பாதை தெளிவான பாதை. கூட்டணி கட்சித்தலைவர்கள் கட்சித்தொண்டர்களை உற்சாகப்படுத்த இவரு பேசி வருவதாக தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூட்டணி தற்போதும் தொடர்வதக்கவும் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் தோழமை கட்சியோடு இணைந்து செயல்படுகிறோம். டாஸ்மாக் திறப்பு குறித்து முதலமைச்சர் பார்த்துக் கொள்வார். எம்ஜிஆர்க்கு பிறகு திரையுலக சக்கரவர்த்தியாக கமலஹாசன் இருந்தாலும், அரசியலில் தேர்ந்தவரில்லை. திரையுலகில் கமலஹாசன் ஜாம்பவான், அரசியலில் எல்கேஜி. என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
No comments