Header Ads

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோவிலின் கோபுரத்தில் தேசியக்கொடி

 

✍  |   ராஜாமதிராஜ்.

இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோயிலின் கோபுரத்தின் மீது ராஜா கம்பீரத்துடன்  ஏற்றப் படுகிறது.  

ஒவ்வொரு வருடமும இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு.

அன்றைய தினம் அதிகாலையில்    நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள். 

பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்கிறார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும்..

No comments

Powered by Blogger.