மன்னார்குடி அருகே கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 9 ஆயிரம் பனைவிதைகள் நடப்பட்டது.
✍️ | ராஜாமதிராஜ்.
மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு சார்பில் கடந்த மூண்டு ஆண்டுகளில் பல்வேறு நீர்நிலை தூர்வாரப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது.
அதே போல் கிராமப்புற சாலையோரங்களில் பல ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு சார்பில் மன்னார்குடி அருகே ரிஷியூர் கிராமத்தில் பனை விதை திருவிழா நடைபெற்றது.
ரிஷியூர் கிராமம் முதல் வாளாச்சேரி கிராமம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு 9 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டது. திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கமல்கிஷோர் பங்கேற்று பனை விதைகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பனைமரத்தை பாதுகாப்பது,பனைமரம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பாடிட புத்தகங்களில் பனைமரம் குறித்த பாடங்களை இடம்பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது
No comments