லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சசிகலா வந்தவுடன் அதிமுகவை மீட்கும் பணிகளை தொடங்குவார் - அமமுக பொருளாளர் வெற்றிவேல்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் (2020-2021-ம் ஆண்டு) 3 வருட சட்டப் படிப்பிற்கான (LL.B) மாணவர் சேர்க்கை விண்ணப்பம் 30-09-2020 தேதி முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் :28-10-2020 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை போல் சட்ட மேல் படிப்பான LL.M படிக்க மாணவர் சேர்க்கை விண்ணப்பம் 7.10.2020 முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் 04.11.2020 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு. பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் , கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்கலாம்- உயர்கல்வித்துறை. ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது தமிழக உயர்கல்வித்துறை.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள 7 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
காணொலி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், போன்ற விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன
உலகில் கொரோனா தொற்றால் 3,17,63,721 பேர் இதுவரை பாதிப்பு.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 974,546 பேர் மரணம்.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 2,33,69,315 பேர் மீண்டனர்.
உலகில் கொரோனா பாதிப்புடன் 7,419,860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
No comments