மத்திய மாநில அரசுகள் தாலிக்கு தங்கம் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தல்
✍️ | ராஜாமதிராஜ்.
கரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த தமிழக மக்கள் அனைவருக்கும் மத்திய மாநில அரசுகள் தாலிக்கு தங்கம் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்டூர் கடைவீதிகளில் வியாபாரிகளிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர். கடந்த 5 மாதங்களாக ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள தமிழக மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 7,500 ரூபாய் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்.
விவசாயிகளின் வங்கிக் கடன், கூட்டுறவு கடன்களை, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட நாளை 200 நாட்களாக அதிகரித்து நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஊரடங்கு நேரத்திலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் அடித்தட்டு நடுத்தர மக்கள் திருமணம் உள்ளிட்ட விழாக்களை நடத்த முடியாமல் இருக்கின்றனர்.
எனவே மத்திய மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாலிக்கு தங்கம் இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் வழங்கினர்.
No comments