கேரள மாநிலத்தில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவச முடிதிருத்தகம்...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
கேரளாவில் உள்ள சலூன் கடைக்காரர் ஒருவர் கொரோனாவுக்குப் பின் 14 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக முடிதிருத்து விடுகிறார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் குமாரன் ஆசான் சாலையில் உள்ளது கிங் ஸ்டைல் . கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு கடை திறந்த அவர் கடைக்கு வாடிக்கையாளர்கள் வராமல் போனதால் கவலை அடைந்துள்ளார்.
மேலும் வாடிக்கையாளர்கள் வராததற்கு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் தான் காரணம் என கண்டறிந்த அவர் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாக முடிவெட்டு விடுவதாக அறிவித்துள்ளார்.
அதன் பின்னர்தான் குழந்தைகள் கூட்டம் அதிகமாகியுள்ளது. அதனால் இப்போது 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இலவசம் என அறிவித்துள்ளார்.மேலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவசம் என அறிவித்துள்ளார்.
மூன்று கடைகள் வைத்திருக்கும் இந்த கடையின் உரிமையாளர் கோபி ஒரு கடையில் மட்டும் இலவச சேவை செய்து வருகிறார். அதனால் மற்ற இரு கடைகளில் இருந்து வரும் வருமானத்தால் நஷ்டத்தை சரிப்படுத்திக் கொள்கிறார்.
No comments