Header Ads

லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

 “கொரோனாவால் பாதிக்கப்பட்டு, BSF படையை சேர்ந்த 23 பேரும், CRPF வீரர்கள் 35 பேரும், CISF வீரர்கள் 24 பேரும், இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேரும், SSB படை வீரர்கள் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்!"- மத்திய உள்துறை அமைச்சகம்.

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,090 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.40.06 லட்சம் மீட்பு - மாவட்ட ஆட்சியர்.

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு.

நிலம் வைத்துள்ள, நிதி உதவி பெற தகுதி உள்ள விவசாயி யார் என்பதை கண்டறிவது மாநில அரசின் பொறுப்பு.

தமிழகத்தில் உழவர் நிதி திட்டத்தில் நடந்துள்ள ஊழல் தனது கவனத்துக்கு வந்துள்ளது

தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட உழவர் உதவி நிதி ரூ.47 கோடி மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் 10 வழக்குகள் பதிவு செய்து 16 பேரை கைது செய்துள்ளது.

இதுவரை ஒப்பந்த ஊழியர்கள் 19 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கணினி கடவுச் சொற்களை திருடி சிலர் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர் --மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

பல்லாவரம் மற்றும் வண்டலூர் ஓட்டேரி மேம்பாலம் 17ம்தேதி தமிழக முதல்வர் மக்கள் தலைவர் எடப்பாடி யார் திறந்து போக்குவரத்தை துவக்கி வைக்கிறார்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு.

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.57-க்கும், டீசல் ரூ.77.91-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை நடிகர் சூர்யாவின் திரைப்படத்துக்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.


No comments

Powered by Blogger.