தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15-ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 20-ம் தேதி அறிவிக்கப்படுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு ஆயத்த பணிகளாக நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுமென தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படுமென அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், காலதாமதற்கான காரணம் ஏதும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பொதுவாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை கூட்டமானது நடைபெறும்.
அதன் அடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கக்கூடிய கருத்துகளின் அடிப்படையில், சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுதல், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், இரட்டை பதிவுகள், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை வீடுகளுக்கே சென்று நடத்துவது உள்ளிட்ட ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டமானது தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்நிலையில், கொரோனா தொற்றானது தற்போதும் பரவி வருவதால், நேரடியாக சென்று சரிபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில், சில சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால்தான், தற்போது இறுதி வாக்காளர் பட்டியலானது ஜனவரி 15ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 20ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்
No comments