மாலை முக்கிய செய்திகள் 18 செப்டம்பர் 2020
✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.
* விழுப்புரம் விசாரணை கைதி தப்பி பிடிப்பட்ட விவகாரம் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் - எஸ்.பி ராதாகிருஷ்ணன் உத்தரவு.
* நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பீரவீன்குமார் அபினபு உத்தரவு.
* நாடு முழுவதும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட 382 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை - இந்திய மருத்துவ கூட்டமைப்பு குற்றச்சாட்டு.
* துபாய் - இந்தியா இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை 15 நாட்களுக்கு ரத்து. துபாய்க்கு சென்ற விமானத்தில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் நடவடிக்கை..! - துபாய் விமான போக்குவரத்துத் துறை அறிவிப்பு.
* அரசு பணியிட மாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவுறுத்தல்..! 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் பொது இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக செலவை குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை..!
* இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் மாற்றுத்திறனாளிகள் பணம் கட்ட தேவையில்லை என்பதற்கான மத்திய அரசாணை.
* தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளராக 1994 முதல் பணியாற்றி வருகிறார் சமீப காலங்களில் ஏற்பட்ட வரதா புயல் தானே புயல் கஜா புயல் ஆகிய பாதிப்பின் போதும் பணிபுரிந்துள்ளார் இதுவரை ஒப்பந்தத் தொழிலாளர் ஆகவே பணிபுரிந்து வருகிறார் இவர்களின் நிலை எப்போது தான் சரி செய்யப்படும் இவர்களுடன் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது இந்த புராண காலத்திலும் எங்கும் செல்ல முடியாத குழந்தைகளுக்கும் பீஸ் கட்ட முடியாத நிலைமை மிக மோசமாகவே உள்ளது இதை கவனிக்குமா மின்சாரத்துறை பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் கேள்விக்குறியாகவே உள்ளது.
* சென்னை வளசரவாக்கம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கவரிங் நகை மூலம் 12 லட்சம் மோசடி , மேலாளர் புகாரின்பேரில் போலீசார் விசாரணை.
* திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைனில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் தள்ளுபடி செய்யும் அதிகாரிகளை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.
* மேகதாது அணை கட்ட உடனே அனுமதி கோரி டெல்லியில் பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்.
* சென்னை மணலி விரைவு சாலையில் போக்குவரத்து போலீசாரின் அலட்சியத்தால் கண்டெய்னர் லாரிகளை வரிசையில் விடாமல் பொதுமக்கள் செல்லும் சாலையில் விடுவதால் சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகளால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள் ஆளாகினர்.
* நடிகர் சூர்யா மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை இல்லை - நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அனுப்பிய கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு நிராகரித்தது.
* தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள 5 பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது. கணேசன், சங்கீதா, கிறிஸ்துராஜ், பிருந்தாதேவி, அருணா ஆகியோர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலையடுத்து 5 பேரையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
* சின்னம்மா சிறையிலிருந்து வந்ததும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும்! அன்வர் ராஜா, அஇஅதிமுக சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர்.
* 2020-21ஆம் ஆண்டில் அரசு ஊழியர் பொது இடமாறுதலுக்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு.
* "மதுரை ஸ்மார்ட் சிட்டி" நான்காண்டுகள் நத்தை வேகத்தில்... 14 திட்டங்களில் ஒன்று மட்டுமே முடிந்துள்ளது. சு. வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதிலில் வெளிப்படும் தகவல்.
💐💐💐பொதுநலத்துடன் செயல்படும் எங்களுக்கு நண்பர்கள் அனைவரும் நமது லீடர் தமிழ் பக்கத்தை லைக் செய்த பின் குழுவில் இணைந்து எங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.🙏💐💐💐
முகநூல் பக்கம்: https://www.facebook.com/leadertamil/
முகநூல் குழு: https://www.facebook.com/groups/Leadertamilnews/?ref=pages_profile_groups_tab&source_id=106841141041264
No comments