கோ.தென்கச்சி சுவாமிநாதன் மறைந்த தினம் 16 செப்டம்பர் 2009.
1942 ல் தென்கச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தவர். மனித நேயர் கோ.தென்கச்சி சுவாமிநாதன் மறைந்த தினம் 16 செப்டம்பர் 2009 (67). பதிநான்கு வருடங்கள் இடைவிடாமல், "இன்று ஒரு தகவல்" வழங்கி, சென்னை வானொலிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர். மிக எளிமையாகவும், யதார்த்தமாகவும் பேசி, உயரிய கருத்துக்களை சுவையோடு வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் ஒருவர் உண்டென்றால் அவர் தென்கச்சி தான். இலக்கியத்தையும் இயல்பாகவே பேசுவார். என்னிலையிலும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசாமல் மக்களை வசப்படுத்தியவர்.
அவர் சிந்தனை மக்கள் சிந்தனை. அவர் பேசியது மக்கள் பிரச்சினை. அவர் மொழி மக்கள் மொழி. எங்களது நட்பு 1969 ல் தொடங்கியது. பொதுவாக, நான் புகழ் பெற்ற மனிதர்களை வியந்ததில்லை. ஆனால் -- தென்கச்சி இதற்கு விதி விலக்கு. எந்த நிலையிலும் ஆரவாரமின்றித் திகழ்ந்த உன்னத நண்பர். நான் கண்டு உணர்ந்த, மனிதருள் மாணிக்கம். தென்கச்சி வாங்கிய எல்லா விருதுகளுமே அவரைத் தேடி வந்தவை தான்.
No comments