20 சவரன் தங்க நகை ரூ 60 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை...
✍️ | ராஜாமதிராஜ்.
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை ரூ 60 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை...
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் காந்திநகர் எம்.சி. ரோடு பகுதியில் அம்சவேணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார் இவர் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 சவரன் தங்க நகை 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் செல்போன் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர் கொள்ளை போன நகைகள் மற்றும் ரொக்கப்பணம் பொருட்கள் உள்ளிட்டவைகள் மதிப்பு ரூ,9 லட்சமாகும் இதுகுறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments