பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
✍️ | ராஜாமதிராஜ்.
திருக்களர் கிராமத்தில் 900 ஏக்கர் விவசாய நிலத்திற்கு 2019 -2020 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருக்களர் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நல குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்களர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வாயிலில் உழவர் உற்பத்தியாளர் நலக்குழு தலைவர் உத்திரிய நாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருக்களர் பகுதியில் உள்ள சுமார் 900 ஏக்கர் விளை நிலங்களுக்கு அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பதிவு செய்த 2019 2020 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என கூறியும் இது தொடர்பான கணக்கெடுப்பில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் கூட்டுறவு வங்கி தலைவர் பாரிஜாதம் அவர்களிடம் வழங்கினர்.
No comments