400 ரூபா கேக்குக்கு 4000 ரூபாய் பில்லா..? பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர் சூரி !
✍️ | மகிழ்மதி.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த நிலையில் சொந்த வீட்டிலேயே இவருக்கு மிகப்பெரிய அநியாயம் ஒன்று நடந்திருக்கிறது.
சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு இவரது பிள்ளைகள் கேக் வாங்கி வீட்டில் வெட்டி கொண்டாடியதையொட்டி, அந்த கேக்கிற்கு ஆன செலவையும் அதே கேக்கில் குறிப்பிட்டு சூரியை அதிர்ச்சி ஆக்கியுள்ளனர்.
அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்
எப்பொழுதும் வெள்ளந்தியாக பேசக்கூடிய நடிகர் சூரிக்கு திருமணமாகி வெண்ணிலா மற்றும் சர்வன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சூரி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடியதையொட்டி இவரது குழந்தைகள் இவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அவ்வாறு கொண்டாடப்பட்ட கேக்கின் மேல் எழுதப்பட்டிருந்ததை பார்த்த சூரி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
செலவு 4,000 வெண்ணிலா மற்றும் சர்வன் அப்பாவிற்கு கேக் வாங்கிய கையோடு அதில் கேக்கிற்கு ஆன செலவுகளாக, கேக் செலவு 1500, பெட்ரோல் செலவு 500, டெக்ரேசன் செலவு 2000 என ஆக மொத்தம் அந்த கேக்கிற்கு ஆன செலவு 4,000 ரூபாய் என எழுதிவிட்டு அதன் கீழே, "மொத காச எடுத்து வெச்சிட்டு கேக்க வெட்டு" என்று அந்த கேக்கின் மேல் எழுதி இருந்தனர்.
நாபெத்த பிள்ளைங்க
இவ்வாறு வேடிக்கையாக தன்னுடைய பிள்ளைகள் எழுதிருந்த இந்த அழகான கேக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி பதிவிட்டு "400ரூவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா". எனக் குறிப்பிட்டு இருந்த அந்த பிறந்தநாள் கேக் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
No comments