Header Ads

சீறிப்பாயும் ஜெட்கள்.. இந்திய - சீன எல்லையில் குவிக்கப்படும் விமானங்கள்.. அதிகரிக்கும் பதற்றம்!

 


✍️ | மகிழ்மதி.

லடாக்கில் இந்திய விமானப்படை விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. சீனா தனது எல்லையில் விமானங்களை குவித்த நிலையில் இந்தியாவும் எல்லையில் விமானங்களை குவித்து வருகிறது.


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் ஏற்படும் பட்சத்தில் பெரும்பாலும் அது இரண்டு நாட்டு விமானப்படைகளுக்கு இடையிலான மோதலாக இருக்கும் என்று வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். 1962ல் இந்தியா சீனா இடையே நடந்த போரிலேயே இரண்டு நாட்டு விமானப்படை மீதான கவனம் சென்றது. கார்கில் போரிலும் இந்தியாவின் விமானப்படை மீது கவனம் சென்றது.

தற்போது இந்தியா ரபேல் தொடங்கி நவீன ரக போர் விமானங்களை வாங்கி தனது விமானப்படையை பலப்படுத்தி உள்ளது. இரண்டு நாட்டின் விமானப்படையும் வலுவாக இருக்கும் நிலையில், போர் வந்தால் அது விமானப்படைகளுக்கு இடையிலான மோதலாக உருவெடுக்க வாய்ப்புள்ளது

லடாக் முக்கியத்துவம் 

இந்த நிலையில்தான் லடாக்கில் இந்திய விமானப்படை விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. சீனா தனது எல்லையில் விமானங்களை கடந்த இரண்டு நாட்களாக குவித்து வருகிறது. சீனாவை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் விமானங்களை குவித்து வருகிறது. சீனாவின் சுகோய் 30 போர் விமானங்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை விமானங்கள் குவிப்பு

ரஷ்யாவின் சுகோய் 30 ரக விமானங்களை சீனா தனது நாட்டில் ரஷ்ய அனுமதியுடன் தயாரித்து வருகிறது. சீனாவின் இந்த சுகோய் 30 தற்போது எல்லையில் களமிறக்கப்பட்டுள்ளது. நக்ரி - குன்சா, ஹோட்டன் விமான தளங்களில் சீனாவின் போர் விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்லையில் நவீன ரேடார் கருவிகளை இரண்டு நாடுகளும் பொருத்தி வருகிறது.


தயார் நிலை

இங்கு முழுக்க போர் விமானங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட போர் விமானங்கள் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நேற்றுதான் வடகிழக்கில் இருக்கும் விமானப்படை தளங்களை இந்திய விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதாரியா பார்வையிட்டார். இந்த நிலையில் விமானப்படைகள் தற்போது எல்லையில் தீவிரமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

No comments

Powered by Blogger.