விவசாயிகளுக்கு 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்
✍️ | ராஜாமதிராஜ்.
கொரோனா வைரஸால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள விவசாயிகளுக்கு 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோட்டூர் வருவாய் கிராமத்தில் உள்ள 53 கிராமங்களில் 29 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் இதுகுறித்து புள்ளியியல் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் மின்சார சட்ட திருத்த மசோதா ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் வழங்குவதில் நெருக்கடி இருப்பதாகவும் தமிழக அரசு இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர் மேலும் கரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 7,500 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசு அதிகாரிகளிடம் விவசாயிகள் வழங்கினார்.
No comments