Header Ads

ஏரியில் சவுடு குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மூன்றாவது முறையாக போராட்டம்.


✍️ | ராஜாமதிராஜ்.

திருவள்ளூர் மாவட்டம் புது வாயில் அருகே சவுடு குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  புதுவாயல் ஏரியில் சவுடு குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததை அறிந்து கடந்த சில நாட்களாகவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரண்டு முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இன்று ஏரியில் மண் அள்ளுவதற்காக பொக்லைன் இயந்திரங்கள் ஏரியில் இறக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களது கிராம ஏரியில் மண் அள்ள கூடாது எனக் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறும் ஏரி ஏற்கனவே தூர்வாரல் என்ற பெயரில் மணல் வளம் சுரண்டப்பட்டதால் 70அடியில் இருந்த நிலத்தடி நீர் 140அடிக்கு சரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்போது மீண்டும் குவாரி செய்யப்பட்டால் ஏரியில் எஞ்சியுள்ள மணலும் சுரண்டப்பட்டு நிலத்தடி நீர் அதலபாதாளமான 200அடிக்கு கீழ் சென்றுவிடும் எனவும், குடிநீருக்கு பக்கத்துக்கு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும் என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். 

விவசாயத்திற்கு தண்ணீரின்றி பாலைவனமாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். எக்காரணம் கொண்டும் தங்களது கிராம ஏரியில் குவாரி செயல்பட அனுமதிக்க முடியாது என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

தங்களது கிராமத்தில் குடிநீர் இல்லாமல் டிராக்டரில் வரும் குடிநீரை குடிப்பதா எனவும் கேள்வி எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே கிராம இளைஞர்கள் இருவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து  பொதுமக்கள் குவாரி நிர்வாகிகளுடன் காவல் நிலையத்தில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

No comments

Powered by Blogger.