Header Ads

தன் பள்ளியில் ஆயாவாக பணிபுரிந்தவரின் மகள் திருமண செலவுகளை ஏற்றுக் கொண்ட பள்ளியின் தாளாளர்....



✍️ | ராஜாமதிராஜ்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மா. கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும் மன வளர்ச்சி குன்றிய மகனும் உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள குழந்தை ஏசு மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் செல்லம்மா தனது மகள் செளமியாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தார். 

கொரனா காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் மூடப்பட்டதால் வருமானம் இன்றி திருமணத்தை எப்படி நடத்துவது என தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனை அறிந்த அவர் வேலை பார்க்கும் பள்ளியின் தாளாளர் சபரிநாதன் அவரது நண்பர் சம்பத் என்பவரை தொடர்பு கொண்டு செல்லம்மாவின் நிலை குறித்து விளக்கியுள்ளார். 

சம்பத் மகள் சிறு வயதிலேயே இறந்து விட்டதால் தனது மகளின் நினைவாக சௌமியா திருமணத்திற்கான சமுக சீர்வரிசைக்காக செலவுகளை ஏற்று கொள்ளவதாக கூறியுள்ளார்



இந்நிலையில் இன்று காலை திட்டமிட்டபடி செளமியா அருண்குமார் திருமணம் எளிய முறைப்படி நடைபெற்றது. சம்பத் குமார் வாக்களித்தப்படி கட்டில் பீரோ மெத்தை பித்தளை பாத்திரங்கள் என சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து மணமக்களிடம் வழங்கினார். 

குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் சமூக இடைவெளி கடை பிடிக்கப்பட்டதுடன் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

No comments

Powered by Blogger.