Header Ads

திண்டுக்கல் பூட்டு தொழிலை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்..... பூட்டு உற்பத்தியாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை....

✍ | -ராஜாமதிராஜ். 

திண்டுக்கல் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது   பூட்டு. திண்டுக்கல் பூட்டு தமிழகம் மட்டுமல்லது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.  இங்கு தயாரிக்கப்படும் பூட்டுக்கள் பெரும்பாலானவை முழுக்க முழுக்க கைகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவது இதன் சிறப்பம்சமாகும். இந்த பூட்டு தயாரிக்கும் தொழிலில் திண்டுக்கல் அருகேயுள்ள வேடபட்டி, நாகல்நகர், சந்தைப்பேட்டை, குள்ளனம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன.  திண்டுக்கல் தொழிற்பேட்டை வளாகத்தில் அரசு சார்பில் பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலை நடைபெற்று வரும் நிலையில் பாரம்பரியமாக இந்த தொழில் குடிசை  தொழிலாளாகவே நடந்து வருகிறது.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் உள்ளிட்ட தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பிரசித்திப்பெற்ற கோவில்களுக்கு திண்டுக்கலில் இருந்து தான் தான் மெகா சைஸ் பூட்டுக்கள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கின்றன.

அந்த வகையில் மயிலாடுதுறை பெருமாள் கோவிலுக்கு 35 கிலோ எடையிலான மெகா சைஸ் பூட்டினை திண்டுக்கல் நத்தம் சாலையில், பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் முருகேசன் என்பவர் செய்து வருகிறார். ஏற்கனவே நலிவடைந்துள்ள இந்த பூட்டு தொழில் கொரானா ஊரடங்கின்  காரணமாக  அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. 

மேலும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முருகேசன், அரசு சார்பில் பூட்டு தயாரிக்கும் தொழிலை ஒரு பாடத்திட்டமாக கொண்டுவரவேண்டும் என்றும் இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம் மாணவர்களுக்கு தான் திண்டுக்கல் பூட்டு  தொழில் நுட்பத்தைப் பற்றி இலவசமாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனை மாநில அரசு ஏற்றுக்கொண்டால் தேசம் மட்டுமில்லாது அனைத்து நாடுகளிலும் தமிழ்நாடு பூட்டு என கேட்கும் அளவிற்கு தயார் செய்யலாம் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.