கொரோனா பிணிகளிலிருந்து மக்கள் விடுபட உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சதசண்டியாகம்..
✍ | -ராஜாமதிராஜ்.
திருச்சி உறையூரில் அமைந்துள்ள வெக்காளியம்மன் கோவில் பிரசித்திபெற்றது. வானமே மேற்கூரையாக கொண்ட அம்மனை வழிபட தமிழகம் முழுவதும் பல்வெறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகைதந்து வழிபாடு நடத்துவது வழக்கம். கல்வி, செல்வம், மற்றும் வலிமை இந்த மூன்றினையும் வழங்கி பக்தர்களுக்கு அருள்மழை பெய்து வருபவள் வெக்காளியம்மன்.
பிரசித்திபெற்ற இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் உலக அமைதிக்காக, செல்வம் பெருக, மனச்சஞ்சலங்கள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க, நல்ல மழைபெய்து நாடு செழிப்பதற்காகவும், விளைநிலங்கள் யாவும் விவசாசாயம் செழித்தோங்கிட வேண்டி சதசண்டி பெருவேள்வி எனும் யாகம் நடத்தப்படுவது வழங்கம். இந்தவருடம் 46ம் ஆண்டு சதசண்டியாகம் நேற்று காலை கணபதி பூஜையுடன் தொடங்கி, ஹோமகுண்டத்தில் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க நெருப்பூட்டப்பட்டு, அரிசி, மஞ்சள் உள்பட பலவகையான பொருட்களை இட்டு நெய்ஊற்றி யாகம் நடைபெற்றுவருகிறது.
கொரோனா காலம் என்பதால் மக்கள் யாவரும் கொரோனா பிணியிலிருந்து விடுபடவேண்டியும் பிரார்த்தித்து யாக வேள்வி நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் கோவில்நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
No comments