Header Ads

லீடர் தமிழின் முக்கிய செய்திகள்!!!


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

மதுரை: ஊராட்சி ஒன்றிய பொது நிதியை செலவு செய்வதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டுமென்ற,, திருச்சி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...

சேலம் :  காவல்துறையில் 34 ஆண்டுகளாக பணியில் பல்வேறு விருதுகளைப் பெற்ற போதும் பிளாக்மார்க் தண்டனை பெற்ற தலைமை காவலர் கோபால் என்பவருக்கு பதவி உயர்வு  வழங்காத காவல்துறையின் முடிவு சரியானதுதான் உயர்நீதிமன்றம்

கோவை: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கோவை நகைப்பட்டறை நந்தகோபால் கைதாகிறார். 10 மணி நேர விசாரணைக்கு பிறகு நந்தகோபாலை கொச்சிக்கு கொண்டு சென்றது என்.ஐ.ஏ.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: கச்சிராயபாளையம் அருகே உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் திடீரென முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து நீர் திறக்க படுவதாக அறிவிப்பு.

இதனையொட்டி கரையோர கிராமங்களுக்கு தண்டோரா போட்டு கிராம மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈரோடு: சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிரடி படை வீரர்களுக்கு காலை மாலை சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார் புதியதாக பதவி ஏற்றிருக்கும் ரவி ADGP.

அரியலூர் : அரியலூர் அருகே தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல். திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார் உதயநிதி.

8 மாதங்களில் தேர்தல் வரும்போது அதிமுகவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். 8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவினால் ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நடைமுறைபடியே தமிழக அரசு செயல்படும். - முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

No comments

Powered by Blogger.