மன்னார்குடி பவர் ஜேசீஸ் வார துவக்க விழா இன்று கொண்டாடப்பட்டது.
✍️ | ராஜாமதிராஜ்.
மன்னார்குடி பவர் ஜேசீஸ் சங்கத்தின் சார்பில் ஜேசீஸ் வார துவக்க விழா கொண்டாடப்பட்டது. ஜேசீஸ் தலைவர் சு.சங்கர் குமார் தலைமை வகித்தார் மண்டல தலைவர் ஜே.ஜெயச்சந்திரன் அவர்கள் காணொளி மூலம் விழாவினை துவக்கி வைத்தார்.
தேசிய பயிற்சியாளர் சா.சம்பத் ,மண்டல இயக்குனர் வி.காந்தி லெனின், க.கண்ணன் செயலாளர் செ.குமார்,முன்னாள் தலைவர் பி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முதல் நாளில் அரசு மாவட்ட மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் முகக் கவசம் வழங்கப்பட்டது. மருத்துவர் சா.வெங்கடேஷ் மற்றும் செவிலியர்கள் பெற்றுக்கொண்டனர்.
No comments