பழனியருகே பாரதீய ஜனதா கட்சி கொடிக்கம்பத்தை அகற்ற வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பதற்றம்....
✍️ | ராஜாமதிராஜ்.
பழனியருகே உள்ளது ஆயக்குடி பேருராட்சி. இங்குள்ள ஆர்.எம்.டி.சி நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பாரதீயஜனதா கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டு பாரதீய ஜனதா கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
இந்நிலையில் புதிதாக ஏற்றப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் கொடியை அகற்றவேண்டும் என்று கூறி SDPI, தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் இந்திய தேசிய லீக் அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பழனி டி.எஸ்.பி.சிவா தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஏ.டி.எஸ்.பி. இனிக்கோ திவ்யனும் சம்பவ இடத்திற்கு வந்தார். தொடர்ந்து நீண்டநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விடிவதற்குள்ளாக கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்திருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி கூடிய அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments