திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு! நல்லிரவு வரை விசாரணை.....
✍️ | ராஜாமதிராஜ்.
திருத்தணி காந்தி சாலை, பகுதியில் ரயில் நிலையம் அருகில், திருத்தணி கிளை சிறை, மற்றும் மதுவிலக்கு காவல்துறை, வளாகத்தில் இயங்கி வரும் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய வரும் பொதுமக்கள் அவர்களிடம் கூடுதல் பணம் கேட்பதாகவும் மேலும் அனுமதி இல்லாத வீட்டு மனைகள் பதிவு செய்து புரோக்கர்கள் மூலம் பணம் பெறுவதாகவும்,
திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் செல்கிறது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த பல நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்துள்ளனர் அதனடிப்படையில் வியாழக்கிழமை மாலை- 6- மணிக்கு
திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி -குமரவேல் தலைமையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் -சுமித்ரா காஞ்சிபுரம் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்- அண்ணாதுரை ஆகியோர் கொண்ட தனிப்படை 10க்கும் மேற்பட்டோர் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்,
அவர்களுடன் காஞ்சிபுரம் மாவட்டம், மற்றும் திருவள்ளூர் மாவட்டம், செல்ஆபீசர்,( ஆய்வுக் குழு அதிகாரி) கோடீஸ்வரன் அவர்கள் முன்னிலையில் இந்த திடீர் ரெய்டு திருத்தணி நடைபெற்றது,
நேற்று மாலை-6 மணி முதல் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை-12.45 -மணி நல்லிரவு வரை இந்த சோதனை நடைபெற்றது இந்த சோதனையில் திருத்தணி சார் பதிவாளர் (பொறுப்பு) கவிதா ,இளநிலை உதவியாளர் புருஷோத்தமன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சுரேஷ், மற்றும் அலுவலகத்தில் வேலை பார்த்த தற்காலிக உதவியாளர்கள் சுரேகா, மற்றும் பலரிடம் துருவித் துருவி விசாரணை 6/30 மணி நேரம் செய்த அதிகாரிகள் மற்றும்
அலுவலகத்தில் இருந்த கோப்புகளை பலமணிநேரம் சரிபார்த்து அதிகாரிகள் தற்காலிக ஊழியர் இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த பணம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே வைத்திருந்த பணம் ஆகியவை ரூபாய் -₹-50,000 ஆயிரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அலுவலகத்தில் இருந்து எடுத்து பறிமுதல் செய்தனர் இந்த பணம் எப்படி வந்தது இதற்கான கணக்கு என்ன என்று பல மணி நேரம் விசாரணை செய்தனர் ஆனால் தற்காலிக ஊழியர்கள் மற்றும் பொறுப்பு சார் பதிவாளர் கவிதா ஆகியவர்கள் இதற்கான தகுந்த பதில் சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது, மேலும் பல முக்கிய கோப்புகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை முடிவில் எடுத்துச்சென்றனர்,
திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த லஞ்ச ஒழிப்பு அதிரடி சோதனையில் சிக்கிய அனைவரையும் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திலிருந்து இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு முறையான விசாரணை செய்யப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கூறியுள்ளனர் ,
மேலும் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது சார் பதிவாளர் பொறுப்பு கவிதா அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை முடிந்து வீட்டுக்கு நள்ளிரவு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் பொழுது அவரது ஓட்டுனர் அதிவேகமாக காரை எடுத்துச் செல்ல முயற்சி செய்தார்.
அப்போது எதிரில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த இரண்டு நிருபர்களை இடித்து விபத்து ஏற்படுத்தும் வகையில் செய்தார் இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூபாய் 50,000 கைப்பற்றி சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டது நள்ளிரவு வரை விசாரணை செய்தது திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments