திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரை.
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
அரசியல் சட்டத்தில் மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயம் பற்றி மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு விவசாய மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது.
அதனை தட்டிக் கேட்கத் திறனற்ற எடப்பாடி பழனிச்சாமி விவசாயி அல்ல; அவர் விஷவாயு.
புதியக் கல்விக் கொள்கை மூலம் நமது மாணவர்களின் கல்வியை அழித்ததோடு விவசாய மசோதா மூலம் விவசாயத்தையும் அழிக்கிறது மத்திய அரசு.
கொரோனா காலத்திலும் கொள்ளை அடிப்பதிலேயே தான் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 தரச் சொல்லி திமுக வைக்கும் கோரிக்கையை தமிழக அரசு காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்கிறது.
விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தில் ஊழல், கிஷான் திட்டத்தில் முறைகேடு நடக்கிறது.
விவசாய மசோதாக்களை திரும்பப் பெறும் வரை இதனை திமுக விடப் போவதில்லை.
No comments