TNPSC தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்க கூடாது - மன்னார்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
✍️ | ராஜாமதிராஜ்.
பகத் சிங்கின் பிறந்த நாளான இன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் சார்பில் எங்கே எனது வேலை என கேட்டு திருவர்ருர் மாவட்டம் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி பெரியார் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில தலைவர் மௌனம் குணசேகரன், நகர செயலாளர் சிவ.ரஞ்சித், மாநிலக்குழு உறுப்பினர் காலைஅஸ்வினி ,நகரத்தலைவர் சார்லஸ் விக்டர், நகரப்பொருளாளர் ஆனந்த், உள்ளிட்ட பலர் பங்கேற்று TNPSC தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் எனும் அரசாணையை ரத்து செய்து தமிழக அரசின் பணியிடங்கள் தமிழர்களுக்கே என சட்டம் இயற்றிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்களை ஏழுப்பினர்.
No comments