Header Ads

கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் இன்று தொடங்கியது நீட் தேர்வு.



✍️ | ராஜாமதிராஜ்.

இந்தியாவில் 3 ஆயிரத்து 842 மையங்களில் 15 லட்சத்து 96 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 900 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்கின்றனர். 

இளநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிக்கான நுழைவுத்தேர்வு நீட் எனப்படும். இத்தேர்வு ஞாயிற்றுக் கிழமையான இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது தமிழகத்தில் மட்டும் 1.17 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்கின்றனர். 

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தேர்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்வு எழுத வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலை ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

அதேபோன்று மாணவர்கள் தங்கள் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே தேர்வு கூடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடலளவில் தகுதியான மாணவர்களை மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

இதனால் இந்த ஆண்டு நீட் தேர்வானது கடுமையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு நடுவில்தான் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது எம். பி. எஸ், பி டி எஸ் இந்திய மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது இதற்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 3822 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கோவை கடலூர் காஞ்சிபுரம் கரூர் மதுரை நாகர்கோவில் நாமக்கல் சேலம் தஞ்சை திருவள்ளூர் திருச்சி நெல்லை வேலூர் ஆகிய நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன தமிழ் ஆங்கிலம் இந்தி தெலுங்கு கன்னடம் குஜராத்தி மராத்தி ஒடியா அசாம் வங்காளம் உருது ஆகிய மொழிகளில் நீட் தேர்வு நடக்கிறது தேர்வை பாதுகாப்பாக நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

No comments

Powered by Blogger.