Header Ads

முக்கிய செய்திகள்

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா:

நேற்று சோதனை செய்யப்பட நிலையில் இன்று தேர்வுக்கு முன் கொரோனா சோதனை முடிவு வெளியானது. கொரோனா உறுதியானதால் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மறுப்பு.

* காஞ்சிபுரத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது. காஞ்சிபுரத்தை அடுத்த புத்தளி கிராமத்தில் ஆதி திராவிடர் காலனியில் வசித்து வந்த7 வயது சிறுமியை முட்புதருக்குள் அழைத்துச்சென்று அதே புத்தளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரஞ்சித்(22) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். குழந்தை தனது பெற்றோரிடம் இத்தகவலை தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்துள்ளனர். குழந்தையை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மாகரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* நடிகர் விஷால் பாஜக வில் இணைய உள்ளதாக தகவல் .. சினிமா வட்டாரத்தில் பரபரப்பு..!

* நாடு  முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு பல கட்டுப்பாடுகளுக்கிடையே நடைபெற்று முடிந்தன.

* மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு தங்கவேல் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். -திரு பார்த்தசாரதி தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

* சென்னை பெருநகர காவலர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகரில் உள்ள காவலர்களின் பிறந்தநாளன்று விடுமுறை அளிக்கப்படும் என்று உத்தரவிட்டதின்பேரில், இன்று 13.09.2020, சென்னை பெருநகர காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையாளர்கள் திருமதி. விமலா மற்றும் திரு. ஶ்ரீதர் பாபு ஆகியோர் தங்களது பிரிவில் பணிபுரியும் உதவி ஆணையாளர் ஜோ.ஜார்ஜ் பெர்ணாண்டஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களுக்கு விடுமுறை வழங்கி தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

* "நீட்" தேர்வு விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட தர்மபுரி மாணவர் ஆதித்யாவின் உடலுக்கு, கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆதித்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தல்படி ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.

* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி. கொரோனா உறுதி செய்யப்பட்டு கடந்த ஆக.31 வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அனுமதி. மருத்துவ பரிசோதனைக்காக அமித்ஷா மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என தகவல்.

* திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில், 'ஒரு தரப்பினருக்கு உரிய பதவிகள் வழங்கவில்லை' என்று தகராறில் ஈடுபட்ட சிலர், அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகளை கொடி கம்பத்தால் தாக்க முற்பட்டதால் பரபரப்பு.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கவேல் மறைவு! வைகோ இரங்கல்:

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தளகர்த்தர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.தங்கவேல் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், தமிழ்நாட்டின் பொதுவாழ்வுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


No comments

Powered by Blogger.