Header Ads

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான ஓடுக்கப்பட்டோர் கூட்டியக்கம் - இரா.இயேசுதாஸ்.


 ✍️ | ராஜாமதிராஜ்.

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான ஓடுக்கப்பட்டோர் கூட்டியக்கம் சார்பில் தந்தைபெரியார் பிறந்த நாளில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் அறிவாளி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.இயேசுதாஸ் அவர்கள் தலைமையில் இந்தியாவின் பன்முகப் பண்பாட்டைச் சிதைத்து, மாநில உரிமைகளை பறித்து மூன்றாம் வகுப்பிலிருந்து இந்தியா முழுவதும் ஒரே தேர்வு மேலும் தேர்வு மேல் தேர்வு என குழந்தைகளை பள்ளியை விட்டு துரத்தி அடிக்கும் கல்வி முறைகளை திரும்ப பெறவும். 

தமிழகத்தில் இந்த கல்வி முறையை அமுலாக்க கூடாது எனவும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.. ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.தாமோதரன், கா.பிச்சைக்கண்ணு.

தமிழ்நாடுஅறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் செ.செல்வக்குமார், க.தங்கபாபு ,தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் அ.முரளி, காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் எஸ்.சுந்தரராஜகோபாலன், கே.பாஸ்கர் மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் , வணிகர்கள், பொதுவுடமைவாதிகள் கலந்துக் கொண்டார்கள்.

No comments

Powered by Blogger.