Header Ads

திமுக தொண்டர்கள் நாளை பிஜேபியில் இணைய உள்ளனர்.


 ✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* தேதி திடீர் மாற்றம்-அமைச்சர்: சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர், இன்று வெளியிடப்பட வேண்டிய இன்ஜினியரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 25-ந்தேதி வெளியிடப்படும்-- அமைச்சர் கே.பி.அன்பழகன்.

* தமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் 2020-21 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தற்காலிக நிறுத்தம். - தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்.

* முதல்வர் சுற்றுப்பயணம்: கொரனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம்.

* திமுக அரசுதான் நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது - முதலமைச்சருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில். நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக அரசு, ஆதரித்தது அதிமுக அரசு. மாணவர்கள் தற்கொலைக்கு அதிமுகவும், பாஜகவும்தான் காரணமே தவிர, திமுக அல்ல. 2010-ல் நீட் தேர்வு வரவில்லை, இந்திய மருத்துவக் கழகம் அப்படியொரு விதிமுறைகளை வகுத்தது. அப்போதைய திமுக அரசு உயர்நீதிமன்றத்தை நாடி, தடையுத்தரவு வாங்கியது - ஸ்டாலின்.

* தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் * http://tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம்; 10,096 பணியிடங்களுக்கு டிசம்பர் 13-ல் எழுத்துத்தேர்வு. -தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம்.

* ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட திமுக தொண்டர்கள் நாளை பிஜேபி அலுவலகத்தில் மாநில தலைவர் முருகன் முன்னிலையில் இணைய உள்ளனர். மேலும் பல முக்கியஸ்தர்களும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதப் பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு 70 அடி உயரத்திற்கு பிரமாண்ட கேக் தயாரிக்கப்பட்டு நாளை அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* நீட் தேர்வு குறித்த ஸ்டாலின் பேச்சு எடுபடாது..... -தமிழக பாஜக  துணை தலைவர் நயினார் நாகேந்திரன்.

* புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் லாட்டரி டிக்கெட் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலசரவணன்.

* மன்னார்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் அண்ணன் தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* காவிரி செல்வன் விக்னேஷின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் மன்னார்குடியில் நடைபெற்றது.

No comments

Powered by Blogger.