விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் -உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
✍ | -ராஜாமதிராஜ்.
தேவையின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பங்கேற்று மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்த அவர்களை வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் கட்சியின் மீது உள்ள ஈருப்பாலும் அதிமுக ஆட்சியின் எந்திரன் 2 மாணவர் நற்பெயரால் ஏராளமானோர் சாரை சாரையாக வந்து அதிமுகவில் இணைந்து கொண்டிருப்பதாகவும் இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
நெல் கொள்முதலில் இதுவரை 23 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் தற்போது 32 லட்சத்து 24 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவில் நெல் கொள்முதலில் தற்போது மைல்கல்லாக அமைந்துள்ளது. மேலும் தற்போது காரிப் பருவம் தொடங்கி உள்ளதால் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும் எனவே தேவையின் அடிப்படையில் விவசாயிகளிடமிருந்து கூடுதலாக எனில் கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
No comments