காதல் திருமணம் செய்த இளைஞருக்கு மொட்டையடித்து கொடூரமாக தாக்கிய குடும்பத்தினர்...
✍ | -ராஜாமதிராஜ்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வரதராஜ் இவரது மகன் அருள்குமார் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இவருக்கும் ஏத்தாப்பூர் அடுத்த தாண்டனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தனர் சிறுமி மைனர் என்பதால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த நிலையில் சிறுமியுடன் அருள்குமார் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமானார் இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதுதொடர்பாக வாழப்பாடி போலீஸில் அருள் குமாரின் தாயார் தனது மகன் மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான காதல் ஜோடியை தேடி வந்தனர். இதனிடையே வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனியில் குடும்பம் நடத்தி வந்தனர் தற்பொழுது அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் இதுபற்றிய தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்குமார் வீட்டுக்குச் கிடைத்தது இதனையடுத்து கடந்த 23ஆம் தேதி இரவு அருள் குமாரின் தாய் மற்றும் சகோதரர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சென்றனர் அங்கு அருள்குமார் கடுமையாக தாக்கி காரில் கடத்தி சின்னமநாயக்கன்.
மாற்று சாதி பெண்ணை காதல் திருமணம் செய்வதற்காக வாலிபரை அவரது குடும்பத்தினரே கடத்தி கொடூரமாக தாக்கி மொட்டை அடித்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மைனர் பெண்ணை திருமணம் செய்ததாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்பொழுது சிறுமி 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments