Header Ads

லீடர் தமிழின் கல்விச் செய்திகள்...



✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

  • செப்டம்பர் 21 முதல்  9-ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை விதிகளை கடைப்ப பிடித்து பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி. பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பிறகு மாணவர்கள் பள்ளிக்கு  வந்து  ஆசிரியரிடம் ஆலோசனை பெறலாம் என அறிவிப்பு.

  • பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

  • தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கிய 14 நாட்களில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

  • தமிழகத்தில், சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்த டி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • தமிழகத்தில் நீட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு.

  • ஆந்திர மாநிலத்தில் நான்காவது ஊரடங்கு தளர்வுகளுடன் செப்டம்பர் 21-ம் தேதி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதிக் கடிதத்தை எடுத்து வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • ஏழை மாணவர்களுக்கான 25% கட்டாய இலவசக் கல்விக்கான இடங்கள் அட்டவணையை உடனடியாக நாளிதழில் விளம்பரப்படுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவு.

  • ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

  • அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு, UGC, AICTE இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

  • ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 க்கான எழுத்து தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பெயர்பட்டியல் அனுப்ப உத்தரவு

  • தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்டம்பர்-30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.