இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவிற்கு, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து யாரும் செல்ல வேண்டாம் -மாவட்ட எஸ்பி தகவல்
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவிற்கு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து யாரும் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழா குறித்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக செப்டம்பர் மாதம் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவிற்கு வெளிமாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் எவரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் எவரும் இம்மானுவேல் சேகரன் ஜெயந்தியில் கலந்து கொள்வதற்காக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
No comments