Header Ads

அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது

| -ராஜாமதிராஜ். 

மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த ஆனந்தி என்பவர் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக கடந்த நான்கு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து அவ்வப்போது பல்வேறு புகார்கள் எழுந்தது. தற்காலிக பணியாளரான ஆனந்தி பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ரசீது போடும் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் வீடு கட்டும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது அம்பலமானதால் ஆனந்தி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று காலை தனது 8 வயது மகன் ரிஷிரோகனுடன் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் விரைந்து வந்து பெண்ணிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அப்புறப்படுத்தினர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆனந்தி பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்தது குறித்து எதிர்க்கட்சியினர் கொடுத்த அழுத்தத்தால் ஆளுங்கட்சியினர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக உயரதிகாரிகள் செய்த தவறுக்கு தற்காலிக பணியாளரான என்னை வேலையிலிருந்து நீக்கி விட்டதாக தெரிவித்தார் எனவே தான் பணி நீக்கப்பட்டதற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் ஆனந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.