Header Ads

நடிகர் ரஜினியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்காது: - மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்.

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

* தமிழகத்தில் ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு.

* இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படை வீரர்கள் இணைந்து மேற்கொண்ட  JIMEX-2020 என்ற கடற் போர் பயிற்சியை இன்றுடன் நிறைவு செய்தனர்.

* மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், வழக்கை வரும் 5 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு.

* குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வுக்கு கொரோனா தொற்று.

* சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கிய இளைஞரிடம் விசாரணை.

* புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு  24 கோடி பதுக்கல் தொடர்பாக ஆந்திர தொழில் அதிபர் சேகர் ரெட்டி மீது சிபிஐ வழக்கு தொடர்ந்த்து. இந் நிலையில் போதிய ஆதாரம் இல்லை என இந்த வழக்கு முடித்து வைப்பு.

* கொடைக்கான‌ல் வ‌ன‌ப்ப‌குதியில் உள்ள‌ 12 மைல் சுற்றுலா த‌ல‌ங்க‌ளான‌ தூண்பாறை, குணாகுகை, பைன்ம‌ர‌க்காடுகள்  உள்ளிட்ட‌ ப‌குதிகள் அக்டோப‌ர் 1-ம் தேதி திற‌க்க‌ப்ப‌டும் என‌ வ‌ன‌த்துறையின‌ர் அறிவித்திருந்த‌ நிலையில்  தமிழ‌க‌ அர‌சு அக்டோப‌ர் 31 வ‌ரை ஊர‌ட‌ங்கினை நீட்டிப்பு செய்திருப்ப‌தால் வ‌ன‌ப்ப‌குதியில் உள்ள‌ சுற்றுலாத‌ல‌ங்க‌ளுக்கு செல்ல‌ மீண்டும் த‌டை, வ‌ன‌த்துறை அறிவிப்பு.

* ஒரே நாடு ஒரே தேசம் திட்டம் தமிழகத்தில் நாளை முதல் துவங்குகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொடங்கி வைக்கிறார்.

* சீனாவிலோ, இந்தியாவிலோ எத்தனை கொரோனா உயிரிழப்புகள் என யாருக்கும் தெரியாது- ட்ரம்ப்.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,672-க்கு விற்பனை.

* கொரோனா ஊரடங்கு காலத்தில் பலருக்கு உதவி செய்த பாலிவுட் திரைப்பட நடிகர் சோனு சூட்டுக்கு ஐ.நா.வின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது வழங்க முடிவு.

* யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு.

* வேறு தொற்று நோய்களின் ஆதிக்கமும் இருப்பதால் இந்த பெருந்தொற்று காலம் கடினமாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்.

* பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது - எல்.கே.அத்வானி.

* ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி, லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றம்; சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக, ராஜேஷ் தாஸ் நியமனம்.

* நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி.

நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் பேட்டியளித்துள்ளார். பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தோர் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

* சேலத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை செய்த ஜார்கண்டை சேர்ந்த தம்பதி வெட்டிக்கொலை:

சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை செய்த ஜார்கண்டை சேர்ந்த தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோண்டாபகன், சுதிகேன்ஸ ஆகிய தம்பதி கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் (வயது 94), கொரோனா தொற்று காரணமாக சென்னையில் காலமானார்.

* அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்" வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி: முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை - சீனிவாசன்.

* வேளான் திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்.

* 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி. அக்டோபர் 15-ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.

* கொரோனா ஊரடங்கில் 5வது கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு    பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி. அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு. பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநிலங்கள் முடிவெடுக்கலாம்.

* நடிகர் ரஜினியை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்காது. மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்.

No comments

Powered by Blogger.