Header Ads

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் உண்ணாநிலைப் போராட்டம் - காவல்துறையின் தாக்குதலை கண்டிக்கிறோம்!!

✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

நீட் தேர்வை எதிர்த்து கடந்த 6 நாட்களாக சென்னையில் உள்ள  தங்கள் தலைமை அலுவலகத்தில்  உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவந்த மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த 6 பேர் இன்று காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்டு  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் இருந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் பாதை அலுவலகம் காவல்துறையால்  சூறையாடப்பட்டது,  ஏராளமான கோப்புகள் திருடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பை சேர்ந்த வெற்றிசெல்வி தெரிவித்துள்ளார்.

அலுவலகம் காவல்துறையால் சட்டவிரோதமாக மூடிவைக்கப்பட்டுள்ளது. 

ஒருபுறம் நீட் தேர்வை எதிப்பதாக பேசிக்கொண்டே,  நீட் தேர்வை எதிர்த்து அமைதிவழியில்  போராடுபவர்களை காவல்துறையை கொண்டு தாக்கும் தமிழக அரசின் இரட்டை வேடத்தை, காவல்துறை தர்பாரை கண்டிக்கிறோம். 

இது தொடர்பாக மக்கள் பாதை அமைப்பை திரு.நாகல்சாமி அவர்களை தொடர்புகொண்டு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக நடந்ததை கேட்டு தெரிந்து கொண்டோம்.  அவர் சென்னை காவல்துறை ஆணையர் அவர்களை தொடர்புகொண்டு பேசியதாகவும், தொடர்ந்து போராடாவிட்டால் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதாக காவல் ஆணையர்  கூறியிருக்கிறார். காவல் ஆணையர் இப்படி பேசுவதே மிரட்டல், சட்டவிரோதம். அமைதிவழி போராட்டத்தை ஒடுக்கும் குறுக்குவழி. அரசியல்அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் அமைதி வழியில் போராடும் உரிமைக்கு எதிரானது. உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.  

நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகமாடும் எடப்பாடி அரசாங்கம் காவல்துறை மூலம் நீட்டுக்கு எதிராக பேசுவதை, போராடுவதை தடி கொண்டு ஒடுக்கி பா.ஜ.கா - மோடி அரசுக்கு சேவகம் செய்வதை ம.உ.பா.மையம் வன்மையாக கண்டிக்கிறது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் - சென்னை

No comments

Powered by Blogger.