துணை முதல்வர் பதவியை ஓ.பி.எஸ் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்...
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
* சிலை கடத்தல் வழக்கில் கைதான அமெரிக்க வாழ் இந்தியர் சுபாஷ் சந்திர கபூர் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரிய மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
* திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளர்ணமியான அக்.1-ம் தேதி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல 7-வது முறையாக மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
* பாஜக K.t.ராகவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
* துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு
* அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பு
* மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தில், ஓ.பி.எஸ். பங்கேற்கவில்லை
* நேற்று செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார்
* நேற்று செயற்குழு கூட்டத்தில் நான்கரை மணிநேரத்திற்கு மேல் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம்
* ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே எந்த குழப்பமும் இல்லை- வைத்திலிங்கம் கருத்து
*"ஓ.பி.எஸ். இல்லத்தில் நடந்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இல்லை"
* வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணி - போயஸ் தோட்ட இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
*"ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே எந்த குழப்பமும் இல்லை" - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
* "மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்து முடிவெடுக்கப்படும்"
* மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் அறிவிப்பு
* அக். 1 முதல் 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என கடந்த 24ம் தேதி அறிவிக்கப்பட்டது
* மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - முதலமைச்சர்
மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி முடிவு எடுக்கப்படும் - முதலமைச்சர்
No comments