Header Ads

முக்கிய செய்திகள்: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு....!

 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

* தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு.

* சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் குற்றச்சாட்டு.

* மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம்

"இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை".

* "இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், இந்தி தெரியாது"

* "அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை"

*திருவள்ளூர் மாவட்டத்திற்கு வரும் வழியில் நான் பார்த்த வரை 40% பேர் மாஸ்க் அணியவில்லை. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு விழிப்புணர்வு மட்டுமே ஒரே மருந்து. - முதல்வர் பழனிசாமி.

* பள்ளி சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம் 2019-ம் ஆண்டு 2,410 சம்பவங்கள் நடந்துள்ளன. 2018ம் ஆண்டு 2,052 குற்ற சம்பவங்கள் பதிவு.  2006ம் ஆண்டு முதல் படிப்படியாக பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு.

*படப்பிடிப்புக்கு 75 பேர் மட்டுமே அனுமதி என்பதால் 60 படங்கள் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்புக்கு 100 பேர் அனுமதி அளிக்கக்கோரி முதல்வரிடம்  ஆர்.கே.செல்வமணி கோரிக்கை.

* மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ, யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை.: கே.பி.அன்பழகன்.

அரியர் தேர்வு தொடர்பாக ஏஐசிடிஇ, யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் தமிழக அரசுக்கு வரவில்லை என்று கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சூரப்பா என்ன பதில் கடிதம் எழுதினார்? என அமைச்சர் கேட்டுள்ளார். மேலும் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என அரசு அறிவித்ததை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ கூறியதாக சூரப்பா கூறியிருந்தார்.

* கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் ஒப்புதல் அளித்து படிவத்தில் கையெழுத்திட்டார்.

*பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் 04545- 242683 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பெயர், முகவரி, ஆதார் எண்ணை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்களை அனுமதிக்கப்படுவார்கள்  என்றும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.