கொரோனா நோய் தொற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவல் அதிகாரிகளை வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார் .
✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.
சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) மற்றும் சென்னை பெருநகர காவலில், பல்வேறு காவல் நிலையத்தில் பணிபுரிந்த 19 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பியவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள், நேற்று 07.09.2020, காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் வரவேற்று, வாழ்த்துக்கள் தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி கபசுர குடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை கலந்து கொண்டனர்
No comments